நைட்ரஜன் அடங்கிய தேயிலைப்பசளைகளின் விலை அதிகரிப்பு காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அதிக தொகைப்பணத்தை செலவிட்டு நஷ்டமடைவதாகவும் சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி பசளை இன்றி தேயிலைச்செடிகள் மஞ்சள் நிறமாகி அழிந்து வருவதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே வயல் நிலங்களுக்கு 10000 ரூபாவுக்கு வழங்கும் யூரியா பசளைகளை தமக்கும் வழங்குமாறும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அவ்வாறு இல்லாவிடின் தமது உற்பத்தி பாதிக்கப்படுமெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.










