உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
” தேர்தலை எப்படியாவது பிற்போடுவதே ஜனாதிபதியின் திட்டம். அவர் அந்த வழியிலேயே பயணிப்பாரானால் அதற்கு பதிலடி கொடுப்பதற்கும் நாம் தயார்.
லட்சக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்குவோம். நிச்சயம் தேர்தலை பெறுவோம். அதனை ஒத்திவைக்க இடமளிக்கமாட்டோம்.” – எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.










