தேர்தல் நடக்குமா? அரசின் நிலைப்பாடு 8 ஆம் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சிசபைத் தேர்தல் திட்டமிட்ட தினத்தில் நடைபெறுமா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தப்படுமா, இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று பிரதமரிடம், பஸில் வினவியுள்ளார்.

” எதிர்வரும் 8ஆம் திகதி ஆளுங்கட்சி கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தின் பின்னர் அரசின் முடிவு அறிவிக்கப்படும்.” – என பிரதமர் இதற்கு வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles