தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமை பரிசில் வழங்கும் திட்டமொன்றை இந்திய அரசு ஆரம்பித்துள்ளது. அதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர் தரம், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, க..பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி (குறைந்தபட்சம் 6 பாடங்களில் சித்தியுடன்)
25 வயதுக்கு குறைந்த மாணவர்கள் இந்த புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாமெனவும் WWW.hcicolombo.gov.in
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இல்லாவிட்டால் இந்திய உயர் ஸ்தானிகராலயம்
(இல 36-38,காலி வீதி,கொழும்பு-3) மற்றும் இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம் (01 ஏ மகாமயா மாவத்தை, த.பெ 47,கண்டி ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், பிறப்பு சான்றிதழின் போட்டோ பிரதி, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள், பெற்றோரின் புதிய சம்பள பட்டியல் மற்றும் பெற்றோரின் தொழில் தொடர்பாக தோட்ட அதிகாரியின் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயம், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ 882,கொழும்பு-03 என்ற விலாசத்துக்கு இம்மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.










