நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.

கோட்டா அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles