காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது.
காங்கேசன் துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கம், குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவையே நாளைமறுதினம் திறக்கப்படவுள்ளன.
துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர், திணைக்களப் பணிப்பாளர், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளடங்கிய குழு நாளைமறுதினம் காங்கேசன்துறை வருகின்றது.










