நாட்டின் நெருக்கடிக்கு காரணம் வரையறைகள் இன்றிய கடன்-கம்மன்பில

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கொவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்நோக்காத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலர் இந்த நெருக்கடியை அடையாளம் காணவில்லை. நெருக்கடியை அடையாளம் காணாது அதற்கு தீர்வு காண முடியாது.

கொவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி என பலர் கூறுகின்றனர். இது உலக நெருக்கடி என்கின்றனர். இது பொய். இலங்கை வரையறைகள் இன்றி கடனை பெற்றதே இந்த நெருக்கடிக்கு காரணம்.

நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவதற்கு பதிலாக கடனை பெற்று செலவிடும் கலாசாரத்தை நாம் 1950 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது மேலதிக கடனை பெற முடியாத அளவுக்கு கடன் பொறியில் சிக்கியுள்ளோம். இந்த நெருக்கடி முழு நாட்டு மக்களும் சிக்கியுள்ளனர். இதனால், அதிகமாக பயிரிடுங்கள். உருவாக்கங்களுக்கான உந்துலை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முன்னுதாரணத்தை பேச்சில் அல்ல அரசியல் தலைவர்கள் செயலில் காட்ட வேண்டும். பெருந்தொகையான எரிபொருளை விரயமாக்கி சுதந்திர தின வைபவம் போன்ற அரச நிகழ்வுகளை நடத்துவது தவறு. அப்படியான வைபவங்களை நடத்த வேண்டாம் என நான் அமைச்சரவையில் கோரினேன்.

எனினும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles