நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா பிரதான நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வீதியூடாக நானுஓயா கிலாரண்டன் பகுதியை நோக்கி சென்ற ஆட்டோ, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் ஆட்டோ சாரதிக்கு ஆட்டோவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் ஆட்டோவில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
நானுஓயா நிருபர்
