நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சரால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பட குழுவின் விசாரணை அறிக்கை, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போதே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவால் மேற்படி அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
நானுஓயா குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
