ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் டிப்பர் ரக வாகனமொன்று இன்று (05) குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (05) அதிகாலை நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்
