நாளைய போராட்டத்துக்கு வடிவேல் சுரேஸின் தொழிற்சங்கம் ஆதரவு இல்லை!

நாடு தழுவிய ரீதியில், அரசின் முறையற்ற வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இடம்பெறவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

 

எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு சம்பந்தமாக இடம்பெறவிருக்கும் பேச்சுகளில் தோட்ட கம்பனிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் நாளைய தினம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வழமைப் போல் தமது கடமைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

ராமு தனராஜா

Related Articles

Latest Articles