நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், நில உரிமை தொடர்பாக இரு பிராந்தியங்களிலும் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் ஒருங்கிணைந்து கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Latest Articles