நிழல் உலக தாதா “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது!

பாதாள குழு தலைவரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேசும், அவரது மனைவியும் காரொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.

இவர்கள் பயணிக்கும் காரில் போதைப்பொருள் இருப்பதாக சாஜா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த வாகனத்தை சாஜா பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது இருவரும் பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். அதன்பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னா ரமேஷை பொலிஸில் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவரின் எதிராளி குழுக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னா ரமேஷை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என இலங்கை பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles