இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று (26) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சார கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
