நுவரெலியா தபால் நிலையம் தனியாருக்கு விற்பனை செய்யப்படக்கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” 1894 இல் அமைக்கப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு இடம்பெறுவது கவலை அளிக்கின்றது. அந்த முயற்சி நிறுத்தப்பட வேண்டும். 2017 இலும் இதனை விற்க முயற்சி எடுக்கப்பட்டது. நாம் போராட்டம் நடத்தினோம். நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் முயற்சி இடம்பெறுகின்றது. மக்களிடம் கருத்து கேட்டறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கை என்பது ஜனநாயக நாடு. அரச ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படக்கூடாது.” – என்றார்.










