நோர்வூட்டில் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதியில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்க்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நபரொருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று நோர்வூட் பொலிஸாரால், ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்திய போதே நீதவான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிட்டுள்ளர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் சிப்பாயாவார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்
