பங்களாதேஷ் நாடாளுமன்றுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்!

பங்களாதேஷில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த சூழலில், இன்றும் அந்நாட்டின் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பங்களாதேஷ் டாக்கா நகரில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் வெளியேறினார். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் இன்று புகுந்தனர்.

அவர்களில் சிலர் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.ஒரு சிலர் மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஒரு சிலர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களை வீடியோ எடுத்தனர்.நாடாளுமன்றத்தின் உள்ளே கூடியிருந்தவர்களில் சிலர் எதனையோ எரித்ததில், அந்த பகுதி முழுவதும் புகை பரவி பல அடி உயரத்திற்கு சென்றது. சிலர் கைத்தட்டியும், வெற்றி முழக்கங்களை எழுப்பியும், மேஜை மீது நடந்து சென்றும், குதித்தபடியும் காணப்பட்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles