பசறை – லுணுகல பிரதான வீதி 13 ஆம் கட்டைப் பகுதியில் ஆட்டோவொன்று இன்று முற்பகல் 11.30 மணியளவில் (26/12) வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரும், ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒன்றரை வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகளும், மூன்று வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்










