பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்

பசறை, பிபிலை ஆகிய கல்வி வலயங்களுக்கான புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு (14) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி, பசறை கல்வி வலயத்தின் தற்போதைய கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான திருமதி எம். ஏ. ஸரீனா பேகம் , பிபிலை கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, வெளிமடை கல்வி வலயத்தின் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர கல்வி அதிகாரியான ஆர். எம். நவாஸ் , பசறை கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனங்கள் மூலம் கல்வி நிர்வாகத்தின் செயல்திறன் மேலும் வலுப்பெற்று, வலயங்களின் கல்வி முன்னேற்றம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles