பதிலடி கொடுத்தது விமலின் கட்சி! அமைச்சு பதவியை துறந்தார் ஜயந்த!!

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, தான் வகித்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவர் அனுப்பியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச, அண்மையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவரின் கட்சியை சேர்ந்த – இராஜாங்க அமைச்சு பதவியை வகித்த ஜயந்த சமரவீரவும் பதவி விலகியுள்ளார்.

தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles