பதுளையில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

பதுளை மாவட்ட மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது.

நேற்று (13) மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியின் ஹொப்டன், அம்பலாங்கொட, பீஸ்ஸ சந்திக்கு அருகில் பாரிய மண்மேடு சரிந்ததன் காரணமாக பசறை-லுனுகலைக்கு இடையிலான போக்குவரத்து காலை வேளையில் தடைப்பட்டது.

இதன் காரணமாக பிபிலை, மட்டக்களப்பு,பதுளை போன்ற நகரங்களுக்கான போக்குவரத்து இவ்வீதியில் தடைப்பட்டிருந்தது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் மற்றும் லுனுகலை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த தடையை சீர்செய்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வந்தனர்.

கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியில் ஆங்காங்கே மண் மேடுகள் சரிந்துள்ளன.

பதுளுஓயா உட்பட ஏனைய கிளை ஆறுகளும், ஓடைகளும் பெருக்கெடுத்துள்ளன.மீதும்பிட்டிய டெமேரியா “பீ” தோட்ட” சீ” பிரிவில் தோட்ட குடியிருப்பின் சமையலறை மீது மண்மேடு சரிந்து சமையலறை முற்றாக சேதமடைந்துள்ளது.

தொடரும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மாவட்டத்தில் அனர்த்தங்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles