தொலஸ்பாகை, குறுந்துவத்த ராக்சாவ தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பின் கூரைகள், காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன.
இதனால் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வரும் 24 குடும்பங்கள் தற்போது பரணகலை தமிழ் வித்தியாலய மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
சுமார் 80 பேர்வரை பாடசாலை மண்டபத்தில் தங்கியுள்ளனர் என தெரியவருகின்றது. சீரற்ற காலநிலையால் குறித்த பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களும் சேதமடைந்துள்ளன.