மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (13) காலை 10 மணிமுதல் புதன்கிழமை (14) காலை 6 மணிவரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொரக்காபிட்டிய, சித்தமுல்ல, அருவ்வல, ரத்மல்தெனிய பகுதிகள், மஹரகம – பிலியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரக்கெட்டிய வீதி, போகுந்தர வீதி மற்றும் குறிப்பிடப்பட்ட பகுதிகளின் அனைத்து ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வீதிப்பிரதேசங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட நீர்த்தடை ஏற்படும்.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழ்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.
