இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, வெறும் 12 ஒருநாள் இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், இலங்கைக்காக மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் மூன்று ஒருநாள் சர்வதேச சதங்களைப் பதிவு செய்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் உபுல் தரங்க 21 இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களைப் பதிவு செய்ததே சாதனையாக இருந்தது.
