பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த 47 பேர் கைது

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் வைத்திருந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட நபர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் அதிகாலை 4.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது ஹெரோயின், ஐசிஇ, கஞ்சா மற்றும் மாவா ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடத்தப்படும் சோதனைகள் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்

Related Articles

Latest Articles