பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வாவின் முன்னிலையில் இன்று(07) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு மஹர நீதவான் காஞ்சனா என் சில்வா நேற்று முன்தினம்(05) பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

அரசாங்க நிர்மாணத்திற்காக விடுவிக்கப்பட்ட காணியை தனியாரொருவருக்கு விற்பனை செய்வதற்கு முற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles