பிரபாகரன் உயிரோடு இல்லை – தொல். திருமாவளவன் அறிவிப்பு

” தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே நான் நம்புகின்றேன். இது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.” – என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

” 2009 மே மாதம் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. வெளிநாடு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், மண்ணை தொட்டு வணங்கினார். போர் முடிந்துவிட்டது என தகவல் கிடைத்ததால்தான் அவர் அப்படியொரு சமிக்ஞையை வெளியிட்டிருக்கலாம்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என மே 18 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் மே 19, 20 ஆம் திகதிகளில் பழ. நெடுமாறன் ஐயாவை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். ஐயா, அண்ணன் நிலை என்ன என்று கேட்டேன். அவர் நலமுடன் இருக்கின்றார். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என ஐயா பதிலளித்தார். பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதே என் எண்ணம். ” எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles