உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியின்போது கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“கொழும்பு மாநகரசபை உட்பட எதிரணிகள் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை உள்ள இடங்களில் ஆட்சியமைப்பதற்குரிய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உள்ளுராட்சி ஆணையாளரால் வழங்கப்படும் தினமொன்றில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் மேயராக தெரிவாகக்கூடிய சாத்தியம் உள்ளது.
அதேபோல கொழும்பு மாநகரசபை உட்பட ஏனைய உள்ளுராட்சிசபைகளில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின், பதவி பறிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போல் அல்ல, உள்ளுராட்சி சபை உறுப்பினருக்கு எதிராக இலகுவில் நடவடிக்கை எடுத்து, பதவியை செயலாளரால் பறிக்க முடியும்.”- எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.