பூஜைக்கு சென்ற இளைஞனின் கை துண்டிப்பு – பதுளையில் பயங்கரம்

பூஜைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவரது ‘கை’ துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று, பதுளைப் பகுதியின் ஒலியாமண்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி துண்டிக்கப்பட்ட கையை, மீளவும், சம்மந்தப்பட்டவருக்கு பொறுத்த, பதுளை அரசினர் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுளைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ராஜரட்ணம் சத்யஜீவன் என்ற நபர், தோட்டத்தை விட்டு வெளியேறி, பதுளை ஒலியாமண்டி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சிவராத்திரி தினத்தில் இரவு பூஜை வழிபாட்டிற்குச் சென்று, ஆட்டோவொன்றில் ஒலியாமண்டியின் வாடகை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் காத்திருந்த ஐவர், குறிப்பிட்ட ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி, ராஜரட்ணம் சத்யஜீவனைப் பிடித்து, அவரது கையை வாலொன்றினால் துண்டித்து விட்டு, அவ் ஆட்டோவிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.

அதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவசர இலக்கத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, துண்டிக்கப்பட்ட கையுடன், பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

துண்டிக்கப்பட்ட கையை, அந்நபருக்கு இணைக்க, பதுளை அரசினர் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நீண்டகாலமாக இருந்து வந்த தகராரே, இச் சம்பவத்திற்கு காரணமென்று ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பிரதேசத்தை விட்டு, தலைமறைவாகியுள்ளனரென்றும், விரைவில் இனம்காணப்பட்ட ஐவரும் கைது செய்யப்படுவரென்றும், பொலிசார் தெரிவித்தனர்.

பதுளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜீவகுமார தலைமையிலான குழுவினர், மேற்படி சம்பவம் குறித்து, தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles