‘பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சியை ஒப்படைக்க தயார்’ -ஜனாதிபதி அதிரடி

” நாடாளுமன்றத்தில் உள்ள ஏதேனும் கட்சியொன்று சாதாரண பெரும்பான்மையை (113) நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.”

இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டமொன்றின் பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க எதிரணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, இச்சந்திப்பில் பங்கேற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினரான சாமர சம்பத்,

” ரணில், அநுர என அவர் பிரதமர் ஆனாலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles