பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையால் அதற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், ஆளுங்கட்சியினருடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டுவருகின்றார். மின் கட்டண அதிகரிப்புக்குகூட கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது
