பொலிஸாரின் கண்காணிப்புக்குள் கொழும்பு – இன்று முதல் நடக்கபோவது என்ன?

சிசிரிவி கமராக்கள் மூலம், வீதி விதிமுறைகளைமீறும் சாரதிகளை அடையாளம் காணும் நடவடிக்கை கொழும்பில் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

“ கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான அபராத சீட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன், அவர்கள் இழைத்த போக்குவரத்து விதிமீறல் குறித்த காணொளியும் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.” – என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles