போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் இன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் ரயில்வே கடவைக்கு அண்மையாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள வாடகை அறையில் முற்றுகையிட்டு விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பொழுது 55 தடைசெய்யபட்ட லேகிய பைகளையும் 11 போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர்.
இதேவேளை இதனை விற்பனை நோக்கில் உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 23வயதான யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்து மகோப்பாய் பொலிசாரிடம் ஒப்புடைத்த நிலையில் கோப்பாய் பொலிஸார் குறித்த சிங்கள மாணவனுக்கு எதிராக யாழ் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
