சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலமீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலானது போராட்டக்காரர்களுக்கு எதிரான வேட்டையாடுதலின் முதல் அங்கமாகும். எனவே, போராட்டக்காரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித்,
” சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலமீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவரையும், தாக்குதலுக்கு உள்ளானவரையும் கைது செய்துள்ளனர். இது ஏன் என புரியவில்லை.
கர்மவினை தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் உரையாற்றினார். அதன்பின்னர் சமூகவலைத்தளங்களில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது.
பியத் நிகேஷலமீதுஇந்த தாக்குதலானது முழு போராட்டம்மீதான தாக்குதலின் முதல் அங்கமாகும். எனவே, அவர்களின் உயிர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.










