போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், போராட்டக்காரர்களை வன்முறையை நோக்கி அழைத்துச்சென்ற பயங்கரவாத தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மே 9 மக்கள் எழுச்சியின்போது நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.










