கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளமை பொலிஸார் ‘மலையக குருவி’யிடம் உறுதிப்படுத்தினர்.
லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகளுக்காக தற்போது தம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.
குறித்த இரு சிறார்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளார், பத்தனை பகுதியில் உள்ள தமது தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே அவர்கள் வளர்ந்து வந்துள்ளனர். அத்துடன், மது அருந்திவிட்டுவந்து தமது மருகமன், பேரக்குழந்தைகளை கொடுமைப்படுத்திவருவதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் தாத்தா ‘மலையக குருவி’யிடம் தெரிவித்தார்.
தமது மகன்மாரை தாக்கி கடுமையாக தாக்கி அதனை தந்தை ஒளிப்பதிவு செய்யும் காணொளியை மலையக குருவி வெளிப்படுத்தி இருந்தது.
( மேற்படி தாக்குதல் சம்பவமானது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை அல்ல, அது சமூகப் பிரச்சினை, சிறார்களின் உரிமை சம்பந்தப்பட்ட விடயம். ஆகவேதான் பொறுப்புடனும், பொதுநலன் கருதியும், விழிப்புணர்வுக்காகவும் காணொளியை பதிவிட்டிருந்தோம். குறித்த நபரை கைது செய்யுமாறு காவல் துறையினரை வலியுறுத்தி இருந்தோம். பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தனர். விரைந்து செயற்பட்ட பொலிஸாருக்கும் நன்றி)