மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவி?

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் உணர்ந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.

எனவே தற்போதைய அரசியல் நெருக்கடியை ஓரளவுக்கு தணிக்க பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்க வேண்டும் என பசில் உள்ளிட்டோர் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முக்கிய தடையாக காணப்படும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதனால் அவ்வாறானதொரு பிரேரணையை அவருக்கு திடீரென முன்வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த வாரம் ராஜபக்ச குடும்பத்தினர் உத்தியோகபூர்வமற்ற முறையில் இச்செய்தியை அவருக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்ததாகவும் பிரதமராக பதவியேற்க மகிந்தவுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரதமர் தினேஷ் குணவர்தன தரப்பிலிருந்து இதுவரை பதில் வரவில்லையெனவும் தொடர்ச்சியாக பலர் இது தொடர்பில் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உத்தியோகபூர்வமற்ற முறையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles