மத்திய மாகாணத்தில் 5000 டெங்கு நோயாளர்கள்

மத்திய மாகாணத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5000 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் ஆய்வின்படி கண்டி மாவட்டத்தில் 3957 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 861 நோயாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 186 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக மத்திய மாகாணத்தில் கடும் மழை பெய்தமையால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles