” பச்சோந்திகள்போன்றே மலையக அரசியல் தலைவர்களின் நிலைமை காணப்படுகின்றது.” – என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் தொழிற்சங்க தலைவர்களுக்கு சிரேஷ்ட ஆலோசகர் போன்ற பதவிகள் வழங்கப்படுகின்றன.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 9 திசைகளில் பயணித்துக்கொண்டுள்ளனர். தங்களுக்கிடையே காலை வாரிக்கொள்கின்றனர். மலையக மக்களுக்காக ஓரணியில் நின்று குரல் எழுப்புவதில்லை.
பஞ்சோந்திகள்போன்றே மலையக தலைமைகளின் நிலைமைக்காணப்படுகின்றது.” – என்றார்.
