அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், மலையக தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் டில்லி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்திய பிரதிநிதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.










