‘மலையக மக்களுக்கு நிலங்களை வழங்குங்கள்’ – சபையில் கூட்டமைப்பு வலியுறுத்து

நாட்டின் 50,000 மில்லியன் கடனை செலுத்த 13 இலட்சம் புலம் பெயர் தமிழர்கள் தயாராக வந்தால் வடக்கு, கிழக்கிலும் மலையகத் திலும் அரசியல் தீர்வை பெற்றுத் தர அரசு தயாரா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

பட்டினியை இல்லாமல் செய்வதற்கு நாங்களும் உங்களுடன் கரங்கோர்க்க தயாராக இருக்கிறோம். அதற்காக நீதியான முறையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் முன்வந்தால், நாட்டை சிங்கப்பூராக மலேசியாவாக மாற்றலாமெனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், மலையகத்திலுள்ள காணிகளில் பயிரிட இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி பிரதமரிடம் கோரினார்.

மலைய மக்களின் வாழ்க்கை நிலை மோசமாக உள்ளது. எரிவாயுக்கும் மண்ணெண்ணெய்க்கும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். மலையக மக்கள் பட்டினியை நோக்கி நகர்கின்றனர். அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. சுய ஆதிக்கத்துடன் உழைப்பவர்கள் அவர்கள். அவர்களுக்கு பயிரிட நிலங்களை வழங்குங்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கும் அந்த மக்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் காணிகளை வழங்கினால் அவர்கள் நாட்டுக்குத் தேவையான உணவை தருவார்கள். பொருளாதாரத்தை நிமிர்த்துவார்கள். மனோ கணேசனின் கோரிக்கை நியாயமானது.

அடுத்து வடக்கு, கிழக்கில் குறிப்பாக வன்னியில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டினியால் ஒருகாலத்திலும் அந்த மக்கள் சாகவில்லை. 13 இலட்சம் புலம் பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் 50 ஆயிரம் மில்லியன் கடனை செலுத்த தயாராக வந்தால் வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் அரசியல் தீர்வை பெற்றுத் தர அரசு தயாரா? அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப தயாராக இருக்கிறார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles