மலையக மக்களுக்கு முழு ஆதரவு!

” மலையக மக்களும் இந்நாட்டு பிரஜைகளே. நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிவருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்னாயக்க தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles