மலையக மக்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு!

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா நாட் சம்பளம் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வாண்டு 6000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, சம்பள அதிகரிப்பிற்கான புதிய சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு – லியோனல் வென்ட் அரங்கில் மலையக இளைஞர், யுவதிகளால் ”200+ ஆர்ப்பாட்டத்துக்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அரச மற்றும் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பினை வழங்கினார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1700 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வரவு – செலவு திட்ட உரையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய ஒப்பந்தத்தின் ஊடாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்.

இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு செல்லும் போது தொழில் அமைச்சானது அரசாங்கம் என்ற ரீதியில் அதில் தலையிட்டு முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அந்த சட்டத்துக்கமைய 1350 ரூபா சம்பளத்துக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே சம்பள அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அங்கீகரிக்கப்பட்ட ஹட்டன் பிரகடனத்துக்கமைய அரசாங்கம் மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்கமையவே 1700 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டு வந்தோம்.

எவ்வாறிருப்பினும் நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தின் மூலம் அந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது. பெருந்தோட்ட அமைச்சர் என்ற ரீதியில் நானும், என்ற ரீதியில் நிதி அமைச்சரான ஜனாதிபதியின் பிரதிநிதியாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்தவுடன் முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் அவர்கள் 1700 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் சில தோட்ட உரிமையாளர்கள் 1700 சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். புதிய சட்டத்தின் ஊடாகவேனும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இவ்வாண்டுக்குள் இதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

மலையக மக்களுக்கு சம்பள பிரச்சினை மாத்திரமல்ல. அவர்கள் தமது வாழ்வில் மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 200 ஆண்டுகளாக பல பரம்பரையாக அவர்கள் இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த கால கட்டத்தில் அவர்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கூட இழந்திருக்கின்றனர். அந்த மக்களுக்கு முகவரி இல்லை, அவர்களுக்கென உரித்தான காணி இல்லை, வீடு இல்லை, நிரந்தர வருமானம் இல்லை. இவை மாத்திரமின்றி அடிப்படை வசதிகளும் இல்லை.

ஜூலை 7ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய அந்த மாவட்டத்தில் 75 லயன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மறுசீரமைக்கப்படவுள்ளன.

அதேபோன்று தபால் திணைக்களத்துடன் இணைந்து சகல வீடுகளுக்கும் தபால் முகவரியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், விவாக சான்றிதழ் அற்றவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கான செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தி மலையக மக்களுக்கு முகவரியை மாத்திரமின்றி, 10 பேர்ச் காணியை வழங்குவதற்கும் வீட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாண்டு இந்திய நிதி உதவியுடன் மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கி 4700 வீடுகளையும், கடந்த ஆண்டு கைவிடப்பட்ட மேலும் 1300 வீடுகளையும் சேர்த்து 6000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சகல லயன் வீடுகளுக்கு பதிலாகவும், புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும்.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு 28 இலட்சமும், அடிப்படை வசதிகளுக்காக 4 இலட்சமும் என ஒரு வீட்டுக்காக 32 இலட்சம் ரூபாவை ஒதுக்கப்படவுள்ளது. இந்த பணம் அந்த மக்களிடமிருந்து பெறப்பட மாட்டாது என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles