மலையகத்திற்கு பெருமை சேர்த்த மாஸ்டர் செப் நர்மதா பாலசுப்பிரமணியத்திற்கு ஹட்டனில் மகத்தான வரவேற்பு!

 

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சமையல் கலைப் போட்டியான MasterChef Sri Lanka Season 2 இன் மகுடத்தை வென்று சாதனை படைத்த நர்மதா பாலசுப்பிரமணியத்திற்கான பாராட்டு விழா ஹட்டனில் கோலாகலமாக இடம்பெற்றது.

ஹட்டன் கிருஷ்ண பகவான் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த விழாவிற்காக, காலை 10 மணியளவில் ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் இருந்து வாகன பேரணி மூலம் நர்மதா பாலசுப்பிரமணியம் அழைத்து வரப்பட்டார். அப்போது திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

ஊர்வலம் கிருஷ்ண பகவான் கலாசார மண்டபத்தை சென்றடைந்ததும் பாராட்டு விழா ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஹட்டன் வர்த்தகர்கள், சமூக நல ஆர்வலர்கள், பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நர்மதாவை பாராட்டி கௌரவித்தனர்.

தனது அசாத்திய சமையல் திறமை, படைப்பாற்றல் மற்றும் இடைவிடாத உழைப்பால் பல கடினமான சுற்றுக்களைக் கடந்து இவர் இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.

ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவியான நர்மதாவின் இந்த வரலாற்றுச் சாதனை, மலையக மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கும் மாபெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சமையல் கலையில் சாதிக்க நினைக்கும் பல இளம்பெண்களுக்கு இவர் இன்று ஒரு முன்னுதாரணமாகவும், ஊக்க சக்தியாகவும் மாறியுள்ளார்.

அத்தோடு, இவர் கல்வி பயின்ற ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில், கல்லூரியின் அதிபர் திரு. எஸ். ராஜன் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் விசேட பாராட்டு விழாவும் கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles