மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகிவருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் மே தினக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். எனினும், இது தொடர்பான தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
மொட்டு கட்சியின் மே தின கூட்டம் தொடர்பில் தவறான விம்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
