மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை; கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி

பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்வி க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது.

பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறைமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ​​புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர் மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக குத்தியுள்ளார்.

இதனால் குறித்த மாணவன்  வலியால் அலறி துடித்த நிலையில், பாடசாலை அதிபர் மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பொல்பெத்திகம வைத்தியசாலையில்  ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக   குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.

இதையடுத்து குறித்த மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles