மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 25 வயதுடைய இளைஞர் கைது

பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த  குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் 1,010 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்  களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles