மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில்  நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்க 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினை தொடர்புகொள்ளலாம்.

இந்த இலக்கத்தினூடாக வாட்ஸ்அப்,வைபர் மற்றும் இமோ மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இதுதொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில்  நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

பாவனையாளர்கள்தங்கள் எழுத்து மூலமான முறைப்பாடுகளை ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தின்ஊடாக பதிவேற்றுவதன் மூலம் அல்லது குறுந்தகவலாக டைப் செய்து சமர்ப்பிக்குமாறுகேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குறுகிய காலத்தில் சிறப்பான சேவையைபெற்றுக்கொடுப்பதற்கு பெயர், முகவரி, தொலைப்பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), மின்சார கணக்கு இலக்கம், முறைப்பாடு விபரம்,தொடர்புடைய இணைப்புகள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிடுமாறுபாவனையாளர்கள் தயவுசெய்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.முறைப்பாடுசமர்ப்பிக்கப்பட்ட பின்னர், குறிப்பு இலக்கமொன்றுபாவனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விசாரணைகள் தொடர்பில் கேட்டறியவும்,முறைப்பாடுகளை தாக்கல் செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்,பாவனையாளர் மேற்படி இலக்கத்தின் ஊடாக ஒரு அதிகாரியைதொடர்புகொள்ளலாம்.அதற்கமைய அதிகாரிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து ஒன்லைன்மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களும்,ஏனைய பங்குதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இச்சேவைக்குமேலதிகமாக,பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் 0112392607அல்லது 0112392608என்ற தொலைப்பேசி இலக்கங்கள் மற்றும் info@pucsl.gov.lk அல்லதுcustomers@pucsl.gov.lk  அல்லது www.facebook.com/pucsl ஊடாகஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தொடர்புகொள்ளலாம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles