மின்சாரம் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

குரங்கிடமிருந்து வாழைத்தோட்டத்தை காப்பாற்ற தொடுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் வாழை மரத்தில் உள்ள வாழைக்குலையை குரங்கிடமிருந்து காப்பாற்ற வாழை மரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை கழற்ற முற்பட்ட போது மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே சுமார் ஒரு மணி நேரம் கிடைத்துள்ளதாகவும் பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் சென்று பார்த்த போது குறித்த நபர் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர் குறித்த நபரை மீகாகியூல வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்த நபர் 67 வயதுடைய எக்கிரிய பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது சடலம் மீகாகியூல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்

 

ராமு தனராஜா

Related Articles

Latest Articles