மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே இன்று (22) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 4.2 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் அடங்கிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
